GKNM Hospital Home Page

Paralysis Causes Types and Care

Oct 10, 2025

முடக்குவாதம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பொருப்புத்துறப்பு:

  1. இந்தக் கைப்புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே.
  2. இந்த உள்ளடக்கம் மருத்துவர் அல்லது உடல்நல நிபுணர்களின் அறிவுரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது.
  3. முடக்கு வாதத்திற்காக மருத்துவர் அல்லது உடல்நல நிபுணர்களின் அறிவுரை மற்றும் பரிந்துரையை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

முடக்கு வாதம் (ஆர்ஏ)

  1. முடக்கு வாதம் (ஆர்ஏ) என்பது உடலின் நோய் எதிர்ப்பு நோயெதிர்ப்பு மண்டலம் முட்டுகளை தாக்கி, வீக்கம், வலி மற்றும் மூட்டுகளில் இயக்கம் போன்வாறு ஏற்படும் ஒரு நீண்ட கால நோய் நிலைமையாகும்.
  2. முடக்குவாதம் ஒரே நேரத்தில் உடலில் இரண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரி ஏற்படும்.
  3. ஆர்ஏ வாரங்களிலேயே தொடங்கி, உங்கள் மூட்டுகளை சேதம் செய்யக்கூடும்.
  4. காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், அது முட்டியில் சேதத்தை ஏற்படுத்தும்.

"ஆர்ஏ பொதுவாக கை, கால், மணிக்கட்டு, கை மூட்டு, தோள் மற்றும் கணுக்காலில் இருக்கும் சிறிய மூட்டுகளை பாதிக்கும்."

ஆர் உள்ள உண்மைகள்

  1. ஆர்ஏ யாரை வேண்டுமானாலும் எந்த வயதிலும் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள்) பாதிக்கக்கூடும்.
  2. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு ஆர்ஏ ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

ஆர்ஏ அறிகுறிகள் (முடக்குவாதம்)

  1. வீக்கம் – ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கை மூட்டுகளில் நெடுநேரம் வீக்கம்.
  2. விறைப்பு – அதிகாலை மூட்டு விறைப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தல்.
  3. வலி – மூட்டுகளை அழுத்தும் போது வலி ஏற்படுதல்

இதைத் தவிர:

  1. மூட்டுகளை மட்டுமல்லாது உடலின் பிற பகுதிகளிலும் சிறுமம்
  2. சோர்வு மற்றும் களைப்பு
  3. காரணமறியாத எடை இழப்பு

   ஆர்ஏ பாதிக்கப்படும் உடல் பகுதிகள் மற்றும் உறுப்புகள்

ஆர்ஏ கண்ண்கள், இதயம், நுரையீரல்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கக்கூடும்.

  1. பெரிய மூட்டுகள்
  2. சிறிய மூட்டுகள்
  3. முழங்கால்
  4. இடுப்பு
  5. மணிக்கட்டு
  6. விரல்கள் மற்றும் கைகள்
  7. தோள்
  8. கணுக்கால்

   ஆர்ஏ ஏற்படுவதற்கான காரணங்களும் ஆபத்துக் காரணிகளும்

ஆர்ஏ ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை, இருப்பினும் சில காரணிகள் ஆர்ஏ ஏற்படுவதற்கு பங்கற்கொள்ளக்கூடும்:

  1. பரம்பரை
  2. வாழ்க்கைமுறை – புகைபிடிப்பு ஆர்ஏ ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
  3. சுற்றுச்சூழல் – மாசுபாடு, வைரஸ், குளிர் வெளிப்பாடு.

    தினசரி வாழ்கையில் ஆர்ஏ - வின் தாக்கம்

பாதிக்கப்பட்ட மூட்டுகள் உங்கள் தினசரி செயல்களான மூடிய திறப்பது, பேனாவால் எழுதுவது, கதவு பிடியை திறப்பது, சாவிகளை பயன்படுத்துவது போன்ற செயல்களை பாதிக்கலாம்.

ஆர்ஏ சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன நடக்கும்?

ஆர்ஏ சிகிச்சை அளிக்காவிட்டால், அது மூட்டுகள், சுற்றியுள்ள குறுத்தெலும்புகள், அருகில் இருக்கும் எலும்புகள் போன்றவற்றை சேதமடக்கி, நிரந்தர மூட்டு குறைவாடுகளுக்கு வழி வகுக்கும்.

சிகிச்சை அளிக்கப்படாத ஆர்ஏ-வின் நீண்ட கால விளைவுகள்

  1. இரத்தசோகம் அதிகரிப்பு
  2. இருதய நோய்களின் அதிகரிப்பு
  3. மன அழுத்தம்
  4. முதுகெலும்பு மூட்டுகளின் அழுத்தம்
  5. வண்டல், சிவந்த மற்றும் அரிக்கும் கண்கள்
  6. ஆர்ஏ-யின் பிரச்சனைகள்
  7. மாரடைப்பு
  8. பக்கவாதம்

ஆர்ஏ இருக்கும் நபர்களுக்கு இதர நெடுநோய்களின் ஆபத்து அதிகரிக்கும். 

ஆர்ஏ இருக்கும் நபர்களில் 25% இடங்களில் தொற்றுகள் காரணமாக ஏற்படுகின்றன.

ஆர்ஏ இருக்கும் நபர்களுக்கு 2 மடங்கு அதிகமாக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஆர்ஏ எவ்வாறு கண்டறியப்படுகிறது?

 மூட்டுகளின் பாதிக்கப்பட்ட பிரச்சனைகள் எதும் கண்டறியப்பட்டவுடன் மருத்துவரை அணுகவேண்டும்.

உங்கள் மூட்டுகளை பரிசோதிப்பார் மற்றும் தேவையான சில எளிய பரிசோதனைகளை அறிவுறுத்துவார்.

  பாதிக்கப்பட்ட மூட்டுகள் உடல் பரிசோதனை

  1. இரத்த பரிசோதனைகள்
  2. இமேஜிங் (எக்ஸ்-ரே)
  3.   மூட்டு விக்கம் மற்றும் வலிமை போன்றவை பல இதர காரணிகளால் ஏற்படக்கூடும். எனவே ஒரு இரத்த பரிசோதனை மட்டுமே நிலையை கண்டறிய உதவாது.

ஆர்ஏ பராமரிப்பு

  1.   ஆர்ஏ குணப்படுத்த முடியாது, எனினும் முறையான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றங்கள், நோயாளிகளின் இயல்பான வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
  2. "சரியான மருந்துகளை முன்னதாகவே பயன்படுத்துவது நோயால் ஏற்படும் சேதத்தை குறைக்கக்கூடும், வலி மற்றும் இறுக்கத்தை நீக்கி, நீண்ட கால குறைபாட்டை குறைக்கும்"

Recent Camps & Events